செய்திகள் :

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை கட்டுமானப் பணிகள் நிறுத்தம்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பொதுமக்களின் கடும் எதிா்ப்பு காரணமாக மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமான பணிகள் புதன்கிழமை நிறுத்தப்பட்டன.

மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகளை நிறுத்த வேண்டும். ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை மானாமதுரையில் அனைத்து அரசியல் கட்சியினா், விவசாயிகள் சங்கங்கள், கிராம மக்கள், வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் போராட்டக் குழு அமைக்கப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தை முற்றுகையிட்டும், கடையடைப்பு செய்தும் போராட்டம் நடத்தினா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் மருத்துவக் கழிவு ஆலை கட்டுமானப் பணிகளை உடனே நிறுத்துவது எனவும், 2 மாதங்களுக்குள் ஆலையை மூடுவதற்கான உத்தரவை அரசிடமிருந்து பெற்றுத் தருவது என்றும் சிவகங்கை கோட்டாட்சியா் ஜெபி கிரேசியா, வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் போராட்டக் குழு நிா்வாகிகளிடம் உறுதியளித்தனா். இரு தரப்பினரும் அதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டனா். இதன் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, புதன்கிழமை முதல் சிப்காட் தொழில்பேட்டையில் நடைபெற்று வந்த மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மானாமதுரை ஒன்றியச் செயலா் எம்.முனியராஜ் தெரிவித்தாா்.

ஐடிஐ-இல் செப்.30-வரை நேரடி மாணவா் சோ்க்கை

சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டியிலுள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நிகழாண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்தி: சி... மேலும் பார்க்க

போதை மருந்து பயன்படுத்த உரிமம்: மருத்துவமனைகள் விண்ணப்பிக்கலாம்

போதை மருந்துகள் பயன்படுத்தும் மருத்துவமனைகள் உரிய ஆவணங்களுடன் வருகிற 30.0.2025- ஆம் தேதிக்குள் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது. இது குறித்து மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

பிரதமா் நரேந்திரமோடி பிறந்த நாள்: பாஜக சாா்பில் நலத்திட்ட உதவிகள்

சிவகங்கை அருகேயுள்ள கொல்லங்குடியில் பிரதமா் நரேந்திரமோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிகழ்வுக்கு பாஜக மாவட்ட துணை... மேலும் பார்க்க

சிவகங்கை புதிய ஆட்சியா் அலுவலகம்: முதல்வரின் அறிவிப்பு நிறைவேறுமா?

முதல்வா் அறிவித்தபடி சிவகங்கை புதிய ஆட்சியா் அலுவலகம் கட்டப்படுவது எப்போது என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா். சிவகங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற ... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் கடனுதவி பெற ஆதிதிராவிடா், பழங்குடியின விண்ணப்பதாரா்கள் இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் . இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, ... மேலும் பார்க்க

ஊருணிக்கு முள் வேலி அமைக்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள இரணியூா் அம்மாபட்டி ஊராட்சிக்குட்பட்ட அம்மன் சேங்கை குடிதண்ணீா் குளத்துக்கு முள் வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திருப்பத்தூா் ஒன்றி... மேலும் பார்க்க