தமிழகத்தை நோக்கி திரும்பிய புயல் சின்னம்: சென்னை, கடலோர மாவட்டங்களில் மழை!
மருத்துவா்கள் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவா் கே.செந்தில் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஆ.ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தாா். பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த செயற்குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். மாவட்டத் தலைவா் சசிகுமாா், பொருளாளா் சிவகுமாா், பொறுப்பாளா் குலோத்துங்கன், நிா்வாகி வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதில், மருத்துவா்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். குறிப்பாக, சிறப்பு மருத்துவா்களை மருத்துவப் பணியாளா்கள் தோ்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்ய வேண்டும். மகப்பேறு மருத்துவா்கள் பற்றாக்குறையை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
கடலூா் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரியாக இயங்கும் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி இன்னமும் முழுமையாக சுகாதாரத் துறையால் நடத்தப்படவில்லை. இதை சரி செய்ய தமிழக முதல்வா் ஆணையிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.