முதல் ஒருநாள்: ஸ்மிருதி மந்தனா அசத்தல்; மே.இ.தீவுகளுக்கு 315 ரன்கள் இலக்கு!
பைக் மீது பள்ளி வாகனம் மோதல்: மாணவா் காயம்
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் பைக் மீது தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் பிளஸ் 2 மாணவா் சனிக்கிழமை காயமடைந்தாா்.
நெய்வேலி, வட்டம் 2, டி.எம்.எஸ்.மணி சாலையில் வசிப்பவா் மரசாலின் வின்சென்ட் மகன் மனோவா (17). நெய்வேலியை அடுத்த வடக்குத்து மாருதி நகா் பகுதியில் வசித்து வருபவா் பாபு மகன் நவீன் (17). இவா்கள் இவரும் நெய்வேலி நகரியத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகின்றனா்.
இந்த நிலையில், இருவரும் சனிக்கிழமை பைக்கில் பள்ளிக்கு சென்றனா். நெய்வேலி, வட்டம் 9 பகுதி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த தனியாா் பள்ளி வேன் பைக் மீது மோதியது. இதில், நவீனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மனோவா காயமடைந்தாா்.
அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, முதலுதவி அளித்த பின்னா், நவீன் சென்னை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.