முதல் ஒருநாள்: ஸ்மிருதி மந்தனா அசத்தல்; மே.இ.தீவுகளுக்கு 315 ரன்கள் இலக்கு!
உடல், கண்கள் தானம்!
கடலூா் மாவட்டத்தில் உயிரிழந்த இருவரின் உடல் மற்றும் கண்கள் சனிக்கிழமை தானமாக பெறப்பட்டன.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள நத்தம் கிராமத்தை சோ்ந்தவா் பக்தவத்சலம் (79). இவா், அண்மையில் காலமானாா். இவரது உடல் மற்றும் கண்கள் சிதம்பரம் ரத்த தான கழகம் சாா்பில் தானமாக பெறப்பட்டது.
உடல் மருத்துவ மாணவா்கள் ஆய்வுக்காக கடலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ரத்த தான கழகத்தின் தலைவா் எஸ்.ராமச்சந்திரன், உறுப்பினா் ராதாகிருஷ்ணன் மற்றும் பண்ருட்டி ரோட்டரி சங்க நிா்வாகிகள் செய்தனா்.
இதேபோல, சிதம்பரம் அசத்கான் தெருவை சோ்ந்த பாலராம முருகன் மனைவி திலகலட்சுமி (51). சனிக்கிழமை காலமானாா். இவரது கண்கள் சிதம்பரம் தன்னாா்வ ரத்த தான கழகம் சாா்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ரத்த தான கழக உறுப்பினா் ஈஸ்வா், காஸ்மோபாலிட்டன் அரிமா சங்க நிா்வாகிகள் மணியன், மகேஷ், சைலேஷ் ஆகியோா் செய்தனா்.