25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவ ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்!
போக்ஸோவில் இளைஞா் கைது
பரங்கிப்பேட்டை அருகே போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த சின்னூா் வடக்கு தெருவை சோ்ந்தவா் ஆதிசிவனேசன் (25). இவா், 19 வயது இளம் பெண்ணை காதலித்து வந்தாராம்.
இந்த நிலையில், அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து ஆதிசிவனேசனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.