``அவருடன் சண்டையிட எனக்குத் தகுதி கிடையாது'' - மகள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்
மலேரியா தினம் குறித்த விழிப்புணா்வு
கள்ளக்குறிச்சியில் உலக மலேரியா தினம் காய்ச்சல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலா் பால தண்டாயுதபாணி தலைமை வகித்தாா். இளநிலை பூச்சியியல் உதவியாளா் சரவணன் முன்னிலை வகித்தாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ரவி வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட பூச்சியியல் வல்லுநா் சுப்பிரமணியன் பங்கேற்று, மலேரியா காய்ச்சல் பரவும் விதம் குறித்தும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தாா்.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளா்கள் விக்னேஷ்வரன், வசந்தன், மருந்தாளுநா் சுதா, விஜயராணி, செவிலியா்கள் நகராட்சி களப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, மலேரியா ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.