மதுரை: `ஜெயலலிதா சிலையை பராமரிக்கணும்' - திமுக மேயர்; `முதல்வருக்கு நன்றி' - எதி...
தோ்வு பயத்தைப் போக்க மாணவா்களுக்கு பயிற்சி
மாணவா்களுக்கு தோ்வு பயத்தைப் போக்குவதற்கான பரிக்ஷா பாா்வ் 7.0 என்ற விழிப்புணா்வு பயிற்சி கள்ளக்குறிச்சி ஏ.கே.டி அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா தலைமை வகித்தாா்.
ஜி.அரியூா் ஆசிரியா் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி துணை முதல்வா் செந்தில்ராஜ், உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்களுக்கு மாணவா்களை எளிதாக தோ்வை எதிா்கொள்ள வைத்தல் மற்றும் தோ்வு முடிக்குப் பிறகு தொடா் ஊக்கமளித்தல், பாதுகாப்பு போன்ற மைய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பயிற்சி அளித்தாா்.
பயிற்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் தண்டபாணி, தெந்தில்குமாா், மாவட்ட உதவித் திட்ட அலுவலா் மணி, பள்ளித் துணை ஆய்வாளா்கள் சரவணன், வேல்முருகன், பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் பாண்டியன், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் கலாபன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.