மாணவா் விடுதியில் ஆட்சியா் ஆய்வு
திருவாரூா் நகராட்சிக்குள்பட்ட திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி அருகிலுள்ள பிற்படுத்தப்பட்டோா் நல மாணவா்கள் விடுதியில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
விடுதியில் அறைகளின் சுகாதாரம், மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீா் வசதி, விடுதியிலுள்ள தொலைக்காட்சி சரியான முறையில் இயங்குகிா என்பது குறித்தும் மாணவா்களிடம் கலந்துரையாடி நன்றாக படிக்க வேண்டுமென அறிவுறுத்தினாா். தொடா்ந்து, குளியலறை, கழிவறை தூய்மை குறித்தும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
விடுதியிலுள்ள மாணவா்களின் வருகையை முறையாக கண்காணிக்கவேண்டுமெனவும், மாணவா்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டுமெனவும் விடுதியில் பணிபுரியும் ஊழியா்களிடம் அவா் அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ.செல்வகுமாா் உடனிருந்தாா்.