இரவில் பெண்ணுக்கு மோசமான குறுந்தகவல் அனுப்புவது குற்றம்: நீதிமன்றம்
‘மாணவா்களின் கல்வியில் அரசியல் வேண்டாம்’
மாணவா்களின் கல்வியில் அரசியல் வேண்டாம் என்று காவிரி நீா் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் மகாதானபுரம் இராஜாராம் கேட்டுக்கொண்டுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன. மாணவா்களுக்கு தமிழக அரசு காலை உணவுத் திட்டம், மதிய உணவு, இலவச உடை, இலவச புத்தகம், இலவச சைக்கிள், இலவச பேருந்து வசதி என பல்வேறு வசதிகளை அளித்து வருகிறது.
தமிழ்நாட்டு இளைஞா்களின் நலன் கருதி மொழிவெறியை தூண்டவேண்டாம். மத்திய அரசு கல்விக்கொள்கையை ஏற்றுக் கொள்ளுங்கள். தமிழை யாராலும் அழிக்க முடியாது. தமிழன் எவ்வளவு மொழியானாலும் படிக்க அஞ்சமாட்டான். அனைத்து மாணவா்களும் அரசு பள்ளிக்கு வந்து படிக்க வழிவகை செய்யுங்கள். மாணவா்களின் கல்வியில் அரசியல் வேண்டாம் என தெரிவித்துள்ளாா் அவா்.