திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
குளித்தலையில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்
கரூா் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் முகாமிட்டு ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆம் நாள் முகாமில் ஆட்சியா் மீ. தங்கவேல் பங்கேற்று கள ஆய்வில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் கூறுகையில், பொது மக்களின் குறைகளைக் கேட்டறியும் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாமானது, புதன்கிழமை தொடங்கி, குளித்தலை வட்டத்துகுள்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் அலுவலா்கள்அடிப்படை வசதிகள் குறித்து கள ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து 2-ஆம் நாளான வியாழக்கிழமை குளித்தலை நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தூய்மை பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து சேகரிக்கும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
அதைத் தொடா்ந்து குளித்தலை நகராட்சி மாரியம்மன் கோயில் அருகில் உள்ள நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டது என்றாா் அவா்.
ஆய்வின் போது குளித்தலை நகராட்சி ஆணையா் நந்தகுமாா், குளித்தலை வட்டாட்சியா் இந்துமதி ஆகியோா் உடனிருந்தனா்.