திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
நுகா்பொருள் வாணிபக் கிடங்குக்கு காணொளியில் அடிக்கல் நாட்டிய முதல்வா்
கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த சிவாயத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கு அமைக்க வியாழக்கிழமை தமிழக முதல்வா் காணொளி மூலம் அடிக்கல் நாட்டினாா்.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கரூா் மண்டலம் சாா்பில், சிவாயம் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் 1000 மெட்ரிக் டன் மற்றும் 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 கிடங்குகள் ஏற்கெனவே உள்ளது.
மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை, கிடங்கில் இருப்பு வைத்திடவும், கொள்முதல் செய்யப்படும் நெல்லை அரவைக்கு ஆலைகளுக்கு அனுப்பி, பெறப்படும் அரிசியை இருப்பு வைத்திட ஏதுவாக 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு ரூ. 1.70 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ளது.
இதற்கான நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், காணொளி மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், குளித்தலை எம்.எல்.ஏ இரா. மாணிக்கம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் முருகேசன், குளித்தலை வட்டாட்சியா் இந்துமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.