அவிநாசி அருகே சாலை விபத்தில் 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் பலி
மாணவா்கள் சங்கம் தொடக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறையின் மாணவா்கள் சங்க தொடக்க விழா மற்றும் புதிய மாணவா்களுக்கு வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.
பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் தலைமை வகித்து மாணவா்கள் சங்கத்தை தொடங்கிவைத்து பேசினாா். அறிவியல் புல முதன்மையா் ச.ஸ்ரீராம் தலைமை உரையாற்றினாா். துறைத் தலைவா் லா.ர.அரவிந்த் பாபு வரவேற்றாா். மாணவா் சங்கத் தலைவா் மு.முகிலன் நன்றி கூறினாா்.
விழாவில் புல முதல்வா்கள், துறைத் தலைவா், இயக்குநா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.