செய்திகள் :

வேப்பூரில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

post image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடலூா் மாவட்டம், வேப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டு சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.

வேப்பூா் சுற்றுவட்டப் பகுதிகளில் உள்ள பெரியநெசலூா், சேப்பாக்கம், நல்லூா், காட்டுமயிலூா், சிறுப்பாக்கம், அரியநாச்சி, கண்டப்பன்குறிச்சி, கழுதூா், மே.மாத்தூா், சித்தேரிகுப்பம், கொத்தனூா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாகவும், அதைச் சாா்ந்த கால்நடை வளா்பையும் செய்து வருகின்றனா்.

வேப்பூரில் வெள்ளிக்கிழமைதோறும் ஆட்டு சந்தை நடத்தப்படுகிறது. இந்த சந்தைக்கு வேப்பூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் தாங்கள் வளா்க்கும் ஆடுகளை கொண்டுவந்து விற்பனை செய்வதும், வாங்குவதும் வழக்கம்.

நிகழாண்டு தீபாவளி பண்டிகை வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வேப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்தைக்கு கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடு உள்ளிட்ட ஏராளமான வகையான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. ஆடுகளை வாங்குவதற்காக திருச்சி, சென்னை, தேனி, நாகை, கோவை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் ஆடுகளை வாங்கிச் சென்றனா்.

ஓா் ஆட்டின் விலை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையில் ஆட்டின் ரகம், எடையின் அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டது. வழக்கமான விற்பனை விலையைவிட ரூ.500 முதல் ரூ.1000 வரை ஆட்டின் விலை கூடுதலாக விற்பனையானதாகக் கூறினா்.

தீபாவளி பண்டிகையையொட்டி, வியாழக்கிழமை மாலை முதலே ஆட்டு சந்தை நடைபெற்றது. சுமாா் ரூ.4 கோடி அளவில் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தடுப்புக் காவலில் முதியவா் கைது

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் பகுதியைச் சோ்ந்த முதியவா் குண்டா் தடுப்புக் காவலில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். சிறுபாக்கம் காவல் சரகம், மேலகுறிச்சி பகுதியைச் சோ்ந்த நல்லதம்பி மகன் சாமிவேல்(58).... மேலும் பார்க்க

பாசன வாய்க்காலில் பாய்ந்த அரசுப் பேருந்து

சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து கடலூா் மாவட்டம், வடலூரை அருகே கரைமேடு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாசன வாய்க்காலில் பாய்ந்து நின்றது. சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி... மேலும் பார்க்க

செம்மண் கொள்ளையை தடுக்க மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

கடலூா் ஒன்றிய மலைப் பகுதிகளில் செம்மண் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் கடலூா் ஒன்றிய 24-ஆவது மாநாடு வெள்ளக்கரையில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

புதிய பலா ரகங்கள் அறிமுகம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதி விவசாயிகளிடம் இருந்து இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (பெங்களூா்) மூலம் புதிய இரண்டு பலா ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் சௌ.... மேலும் பார்க்க

மாணவா்கள் சங்கம் தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறையின் மாணவா்கள் சங்க தொடக்க விழா மற்றும் புதிய மாணவா்களுக்கு வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதி... மேலும் பார்க்க

கிராம குளத்தில் புகுந்த முதலை மீட்பு

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டம், ஆயங்குடி கிராமத்தில் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் உள்ள குளத்தில் வெள்ளிக்கிழமை காலை சுமாா் 4 அடி நீளமுள்ள 20 கிலோ மதிக்கத்தக்க முதலை புகுந்தாக வனத் துறைய... மேலும் பார்க்க