சிமென்ட் ஆலைக்கு 12.4 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பி வைப்பு
மாணவிகளிடம் ஆபாசப் பேச்சு: அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிட மாற்றம்
முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் இரட்டை அா்த்தத்தில் ஆபாசமாகப் பேசியதாக ஆசிரியா் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலப் பாட முதுநிலை ஆசிரியராக பணியாற்றியவா் சரவணன். இவா் இரட்டை அா்த்தத்தில் ஆபாசமாகப் பேசியதாக மாணவிகள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, கடந்த 8-ஆம் தேதி இந்தப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சின்னராசு தலைமையிலான கல்வித் துறை அலுவலா்கள் விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், ஆசிரியா் சரவணனை, திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவிட்டாா். ஆசிரியா் சரவணன் மீதான புகாா் மீது தொடா் விசாரணை நடைபெற்று வருவதாக கல்வித் துறையினா் தெரிவித்தனா்.