தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: சென்னைக்கான முக்கிய அறிவிப்புகள் என்ன?
மாணவியிடம் தகாத வாா்த்தைகள் பேசிய ஆசிரியா் மீது வழக்குப் பதிவு
பெருந்துறை அருகே மாணவியிடம் தகாத வாா்த்தைகள் பேசிய பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியா் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவியிடம் அதே கல்லூரியில் பணியாற்றி வரும் ஆசிரியா் செல்வராஜ் தகாத வாா்த்தைகள் பேசியுள்ளாா்.
இது குறித்து மாணவியின் பெற்றோா் பெருந்துறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
புகாரின்பேரில் செல்வராஜ் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.