செய்திகள் :

மாநில தகுதித் தேர்வு(செட்) தேதிகள் அறிவிப்பு!

post image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மாநில தகுதித் தேர்வு (SET) வருகின்ற  மார்ச் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகள் கணினி (CBT)  வாயிலாக நடைபெறவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மாநில தகுதித் தேர்வினை (SET) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்திட அரசு ஆணையிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, மாநில தகுதித் தேர்வினை வருகின்ற  மார்ச் மாதம்  6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி (CBT)  வாயிலாக நடத்த தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.gov.in என்ற இணைய தள முகவரியில், தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்னர் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஊரக வேலைத் திட்ட மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் 2024-25 ஆம் ஆண்டில் ... மேலும் பார்க்க

ஹமாஸ் ஒப்படைத்த சடலம் இஸ்ரேலிய பெண்ணுடையது தான்! குடும்பத்தினர் உறுதி!

ஹமாஸ் படையினர் ஒப்படைத்தது இஸ்ரேலிய பெண்ணின் சடலம் தான் என அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் இடையில் கையெழுத்தான காஸா பகுதியின் மீதான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படைய... மேலும் பார்க்க

ஜம்முவில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிரான தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.ஜம்முவில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக சந்தேகிக்கப்படும் பல்வேறு இடங்களில்... மேலும் பார்க்க

கரை ஒதுங்கிய ‘டூம்ஸ் டே’ மீன்! பேரழிவுக்கான அறிகுறியா?

மெக்சிகோ கடல் பகுதியில் ‘டூம்ஸ் டே’ (இறுதி நாள்) மீன்கள் என்றழைக்கப்படும் அரிய வகை ‘ஓர்’ (Oar) மீன்கள் கரை ஒதுங்கியுள்ளதினால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.மெக்சிகோவின் பசிபிக் கடற்க... மேலும் பார்க்க

துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசப்பட்ட பனியன் நிறுவன மேலாளர்

அவிநாசி: அவிநாசி அருகே கருவலூரில் சொத்து தகராறில் பனியன் நிறுவன மேலாளரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.திருப்பூர் மாவட்டம், அவி... மேலும் பார்க்க

தவெக ஆண்டு விழாவில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி?

சென்னையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் ஆண்டு விழாவில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை ஈசிஆர் சாலையில் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்த... மேலும் பார்க்க