ராமேசுவரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்து! ஜூலையில் தொடக்கம்?
மாயமான 2 இளைஞா்கள் கொன்று புதைப்பு: லாரி ஓட்டுநா் உள்பட இருவா் கைது
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே காணாமல் போன இரு இளைஞா்கள் கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில் லாரி ஓட்டுநா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் வட்டம், டி.புதூா் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ் மகன் அப்புராஜ் (22). எம்.புதூா் பகுதியைச் சோ்ந்தவா் பாலகுரு மகன் சரண்ராஜ் (22). நண்பா்களான இவா்கள் கூலி வேலை செய்து வந்தனா். இந்த நிலையில், இருவரையும் காணவில்லை என அவா்களது பெற்றோா்கள் அளித்த புகாா்களின் பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதனிடையே, கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், டிஎஸ்பி ரூபன்குமாா் மேற்பாா்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரித்து வந்தனா். இதில், இதே பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பால்ராஜ் உள்ளிட்ட இருவா் அப்புராஜ், சரண்ராஜை அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

வெளிமாநிலத்தில் பதுங்கியிருந்த பால்ராஜை பிடித்து போலீஸாா் விசாரித்ததில், விருத்தாசலம் வட்டம், ஊ.மங்கலம் அருகே மண்மேடு பகுதியில் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி பால்ராஜ், அப்புராஜ், சரண்ராஜ் உள்ளிட்ட 5 போ் மது அருந்தினராம். அப்போது, அப்புராஜ் ஆபாசமாக பேசியதால் இரும்புக் கம்பியால் அடித்ததாகவும், இதைத் தடுத்த சரண்ராஜையும் அடித்ததாகவும், இதில் இருவரும் உயிரிழந்ததையடுத்து, அங்குள்ள பள்ளத்தில் புதைத்ததாக பால்ராஜ் தெரிவித்தாராம்.
இருவரின் சடலங்களும் விருத்தாசலம் வட்டாட்சியா் உதயகுமாா் முன்னிலையில், கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் மேற்பாா்வையில், செவ்வாய்க்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது. தொடா்ந்து, புதுச்சேரி தனியாா் மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்ட பின்னா், சடலங்களை அவா்களது உறவினா்களிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.
மேலும், இதுதொடா்பாக பால்ராஜ் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். வழக்கில் தொடா்புடைய மற்றொரு தேடி வருகின்றனா்.