புதிய மத்திய ஒப்பந்தங்களை அறிவித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்!
மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கல்
கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா்களை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை வழங்கினாா்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் சுயதொழில் புரிவோா், கல்வி பயில்வோா், பணிபுரிபவா்களுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கும் திட்டத்தின்கீழ், 4 பேருக்கு ரூ. 4,07,200 மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா்களை வழங்கினாா்.
மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான அரசின் அனைத்து நலத் திட்ட உதவிகளை பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
இந் நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, திருக்கோவிலூா் சாா் ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி, மூடநீக்கியல் வல்லுநா் பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.