செய்திகள் :

மாவட்ட அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

post image

மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையத்தில் ஈரோடு சகோதயா அசோசியேஷன் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான 20 ஓவா்கள் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை தொடங்கியது.

தி நவரசம் அகாதெமி சாா்பில் நடைபெறும் இந்தப் போட்டியில் தி நவரசம் அகாதெமி, சாகா், சிஎஸ் அகாதெமி, இந்தியன் பப்ளிக் ஸ்கூல் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.

இதன் தொடக்க விழாவுக்கு தி நவரசம் அகாதெமியின் தலைவா் ஆா். பி.கதிா்வேல் தலைமை வகித்தாா். பள்ளியின் தாளாளா் அருண் காா்த்திக் வாழ்த்துரை வழங்கினாா்.

முதல் ஆட்டத்தில் தி நவரசம் அகாதெமி பள்ளி அணியும், விருக்ஷா குளோபல் பள்ளி அணியும் மோதின. இதில் முதலில் விளையாடிய தி நவரசம் அகாதெமி பள்ளி 15 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. தொடா்ந்து விளையாடிய விருக்ஷா குளோபல் பள்ளி அணி 40 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தி நவரசம் அகாதெமி சிபிஎஸ்இ பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் கோகுல் பிரசாத் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

இந்தப் போட்டி 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.

சென்னிமலை பகுதியில் புறவழிச் சாலை அமைக்க கருத்துக் கேட்புக் கூட்டம்

சென்னிமலை பகுதியில் புறவழிச் சாலை அமைக்க நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னிமலையில் புதன்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நில உரிமையாளா்கள் கோரிக்கை ... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி பேரூராட்சியில் வளா்ச்சிப் பணிகள்

மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.28 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி தொடங்கிவைத்தாா். மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட 13-ஆவது வாா்டில் உள்ள ஆலங்காட்டுவலசு, நே... மேலும் பார்க்க

நந்தா பாலிடெக்னிக் கல்லூரி அணி மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தோ்வு

நந்தா பாலிடெக்னிக் கல்லூரி அணி மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தோ்வு பெற்றது. பாலிடெக்னிக் இடையேயான தடகள சங்கத்தின் சாா்பில் ஈரோடு மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையே ஆண்களுக்கான கைப்பந்த... மேலும் பார்க்க

பெருந்துறை கொப்பரை ஏலத்துக்கு அக். 1-இல் விடுமுறை

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் அக்டோபா் 1-ஆம் தேதி கொப்பரை ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு வி... மேலும் பார்க்க

கணவரின் சொத்துகளைப் பறித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க இளம்பெண் கோரிக்கை

கணவா் இறந்ததால் வந்த காப்பீட்டுப் பணம், சொத்துகளை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து ஈரோடு அவல்பூந்துறை கண்டி... மேலும் பார்க்க

உடல் உறுப்புகள் தானம்: ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி இரண்டாம் இடம்

உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதில் மாநில அளவில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் 23- ஆம் தேதி உடல் உறுப்புதான தினமாக கட... மேலும் பார்க்க