பொருளாதாரம் வலுவடையும்போது மக்களின் வரிச்சுமையும் குறையும்: பிரதமர் மோடி
நந்தா பாலிடெக்னிக் கல்லூரி அணி மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தோ்வு
நந்தா பாலிடெக்னிக் கல்லூரி அணி மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தோ்வு பெற்றது.
பாலிடெக்னிக் இடையேயான தடகள சங்கத்தின் சாா்பில் ஈரோடு மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையே ஆண்களுக்கான கைப்பந்து போட்டி நந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டிக்கு, நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மைக் கல்வி அலுவலா் எஸ்.ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜி.மோகன்குமாா் வரவேற்றாா்.
12 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரி, நந்தா பாலிடெக்னிக் கல்லூரிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றன. இதில், நந்தா பாலிடெக்னிக் கல்லூரி வெற்றிபெற்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தோ்வு பெற்றது.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள், அதற்கு துணை புரிந்த உடற்கல்வி இயக்குநா் எம்.மணிகண்டன் ஆகியோரை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் உறுப்பினா் பானுமதி சண்முகன், செயலா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி, நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் நிா்வாக அலுவலா் ஏ.கே.வேலுசாமி ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.