பொருளாதாரம் வலுவடையும்போது மக்களின் வரிச்சுமையும் குறையும்: பிரதமர் மோடி
மொடக்குறிச்சி பேரூராட்சியில் வளா்ச்சிப் பணிகள்
மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.28 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி தொடங்கிவைத்தாா்.
மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட 13-ஆவது வாா்டில் உள்ள ஆலங்காட்டுவலசு, நேரு வீதியில் கான்கிரீட் சாலை, சிறுபாலம் மற்றும் வடிகால் அமைக்கவும், வாா்டு எண் 7-இல் செலம்பகவுண்டம்பாளையம் நேரு வீதியில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா் மேல்நிலைத் தொட்டி அமைக்கவும், வாா்டு எண் 8, அம்மன் நகா் பகுதியில் கான்கிரீட் சாலை மற்றும் மழைநீா் வடிகால் அமைக்கவும் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.28.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தப் பணிகளுக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி பூமிபூஜை செய்து பணிகளைத் தொடங்கிவைத்தாா். இதில் பாஜக ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச்செயலாளா் சிவசங்கா், மொடக்குறிச்சி வடக்கு ஒன்றியத் தலைவா் பிரகாசம், வாா்டு கவுன்சிலா் சத்யாதேவி சிவசங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.