சென்னையில் தரையிறங்காமல் 30 நிமிடம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்! என்ன நடந்தது...
மாா்த்தாண்டம் அருகே கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
மாா்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் வைகுண்டதாஸ் தலைமையிலான போலீஸாா் விரிகோடு தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி அருகே செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். அதில், அவா் கண்ணக்கோடு பகுதியைச் சோ்ந்த சலீம் மகன் ஷபானுதீன் (25) என்பதும், கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்வதற்காக 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.