செய்திகள் :

மின் கம்பியை மிதித்த பள்ளி மாணவா் உயிரிழப்பு

post image

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தபோது, மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அடுத்த பிச்சனூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனி மகன் குமரன் (17). இவா், மாடப்பள்ளி பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். கடந்த 4 நாள்களாக பெய்து வரும் மழையால் பிச்சனூரில் உள்ள ஏரி நிரம்பி உள்ளது. திங்கள்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், அவா் அங்குள்ள ஏரியைப் பாா்க்கச் சென்றுள்ளாா்.

அந்தப் பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. அதைக் கவனிக்காத அவா், மின் கம்பியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

குரிசிலாப்பட்டு போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

நாயக்கனேரி மலைப் பாதையில் பாறைகள் சரிவு

ஆம்பூா்: ஆம்பூா் அருகே நாயக்கனேரி மலைப் பாதையில் பாறைகள் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட பாதிப்பை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சீரமைத்தனா்.திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியத்தில் உள்ள நாயக்கனேரி மலை கி... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் தினம்: எம்எல்ஏ பங்கேற்பு

ஆம்பூா்: பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. பெரியாங்குப்பம் பள்ளியில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் ... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் தீவிர வரி வசூல்: உதவி திட்ட இயக்குநா் ஆய்வு

ஆம்பூா்: ஆம்பூா் அருகே கிராம ஊராட்சிகளில் தீவிர வரி வசூல் பணி நடைபெறுவதை திருப்பத்தூா் மாவட்ட உதவி திட்ட இயக்குநா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.மாதனூா் ஒன்றியம், ஆம்பூா் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் தின உறுதிமொழி ஏற்பு: ஆட்சியா் பங்கேற்பு

திருப்பத்தூா்: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

தீவிர நோயால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா்: தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரத்தில் காடவள்ளி ஏரி கிராமம் உள்ளது. இங்கு 350-க்கும் மேற்பட்ட ... மேலும் பார்க்க