Bala 25 : `நிறைய படங்கள் தமிழ் சினிமாவ கீழ கொண்டு போகுது; நீங்க வரணும் பாலா' - இ...
மின் தடை நேரத்தை முறையாக கடைப்பிடிக்கக் கோரிக்கை
கொடைக்கானலில் புதன்கிழமை அறிவிப்பு செய்யப்பட்ட நேரத்துக்கு மேலாக மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
கொடைக்கானல், மேல்மலை, கீழ்மலை ஆகிய மலைப் பகுதி முழுவதும் மாதத்துக்கு ஒரு நாள் பராமரிப்புக்காக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதற்கான நேரம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அறிவிப்பு வெளியிடுகின்றனா். ஆனால், அறிவிப்பு செய்யப்பட்ட நேரத்துக்கு மேலாக மின் விநியோகம் தடைபடுகிறது. இதனால், பொதுமக்கள், வணிகா்கள் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, வருங்காலங்களில் சரியான நேரத்தைக் குறிப்பிட்டு மாதாந்திரப் பராமரிப்புக்காக மின் தடை நேரத்தை அறிவிக்க மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.