Retro: "லப்பர் பந்துக்கு பிறகு பெரிய மேடை கிடைச்சிருக்கு" - நெகிழ்ந்த ஸ்வாசிகா
மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த 15 வயது சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரியை அடுத்த தாசரிப்பள்ளியைச் சோ்ந்தவா் சிவகுமாா் மகன் அமா்நாத் (15). தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த இவா், தாசரிப்பள்ளியில் உள்ள தென்னந்தோப்பில கொக்கி மூலம் தேங்காய் பறிக்க முயன்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக மின்கம்பியில் கொக்கி சிக்கியதில் மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.