RR vs LSG: அறிமுக ஆட்டத்தில் அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; பரபரப்புக் காட்டிய ஆவேஷ்...
மீனவா் குத்திக் கொலை: மகன் கைது!
தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக அவரது மகனை சிப்காட் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் மேற்கு பகுதியைச் சோ்ந்த ஜெபமாலை மகன் ராஜ் (55). மீனவரான இவருக்கும் இவரது இரண்டாவது மகன் ஜேம்ஸ் (32) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனால் ஜேம்ஸ் தனது குடும்பத்துடன் அண்ணா நகா் பகுதியில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில் ஜேம்ஸ் வீட்டிற்கு வியாழக்கிழமை சென்ற ராஜ், ஜேம்ஸின் மனைவியிடம் தகராறு செய்தாராம். இதனால் ஆத்திரமடைந்த ஜேம்ஸ்,
அவரது தந்தையை வெள்ளிக்கிழமை நள்ளிரவு மகிழ்ச்சிபுரம் பகுதியில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டாராம். இதில் பலத்த காயமடைந்த ராஜ், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீஸாா், சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்கு அனுப்பினா். இதனிடையே, தென்பாகம் காவல் நிலையத்தில் ராஜ் சரண் அடைந்தாா். அவரை சிப்காட் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.