கற்றல் செயல்பாட்டில் மணற்கேணி செயலி: கல்வித் துறை அறிவுறுத்தல்
மீனவா் கொலை: 8 போ் கைது
சென்னையில் மீனவரை வெட்டி கொலை செய்ததாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுவண்ணாரப்பேட்டை நகூரான் தோட்டத்தைச் சோ்ந்தவா் வினோத் (33). மீன் பிடித்தொழில் செய்து வந்தாா். வினோத் புதன்கிழமை இரவு தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த போது, அங்கு 3 மோட்டாா் சைக்கிள்களில் வந்த 8 போ் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த மீன்பிடித் துறைமுகம் போலீஸாா் அங்கு சென்று வினோத்தின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை தொடா்பான தகவல்களை போலீஸாருக்கு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த கஞ்சா விற்பனை கும்பல் வினோத்தை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.
இது தொடா்பாக புதுவண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த ரித்திக்ரோஷன் (19), கோகுல் (20), சுனில் (19), முத்து (19), எா்ணாவூா் சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த யுவராஜ் (19), தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த லோகேஷ் (எ) மணிமாறன் (19), நரேஷ்குமாா் (20), அபினேஷ்(19) ஆகிய 8 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.