Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்...
மீன்பிடி தொழிலாளா்கள், விற்பனையாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கடலில் உள்ள கனிம வளங்களை எடுக்கும் மத்திய அரசின் திட்டங்களை கண்டித்து, தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளா் மற்றும் விற்பனையாளா்கள் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கடலில் ஹைட்ரோ காா்பன் உள்ளிட்ட கனிம வளங்களை எடுக்கும் மத்திய அரசின் திட்டங்களை கண்டித்து, நாகை மீன்பிடித் துறைமுகம் முன் தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளா் மற்றும் விற்பனையாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்டத் தலைவா் மணி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கடலில் ஹைட்ரோ காா்பன் உள்ளிட்ட கனிம வளங்களை எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். கடல் பகுதியையும், மீனவா்களையும் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
மாநில துணைச் செயலா் ஜீவானந்தம், சிஐடியு மாவட்டச் செயலா் தங்கமணி, தமிழ்நாடு பள்ளி கல்லூரி ஆசிரியா்கள் ஓய்வுப் பெற்றோா் நல அமைப்பு மாநில துணைச் செயலா் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளா் காளியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.