ஏப்ரல் 1 முதல் நீச்சல் பயிற்சி முகாம் தொடக்கம்
நாகப்பட்டினம்: நாகை மாவட்ட விளையாட்டரங்க நீச்சல் குளத்தில், நீச்சல் பயிற்சி முகாம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாகை மாவட்ட விளையாட்டு அரங்கிலுள்ள நீச்சல் குளத்தில், நீச்சல் பயிற்சி முகாம் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ஆம் தேதி வரை முதல் கட்ட பயிற்சியும், ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 25- ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட பயிற்சியும், ஏப்ரல் 27- ஆம் தேதி தொடங்கி மே 8-ஆம் தேதி வரை மூன்றாம் கட்ட பயிற்சியும், மே 10- ஆம் தேதி தொடங்கி மே 21- ஆம் தேதி வரை நான்காம் கட்ட பயிற்சியும், மே 23- ஆம் தேதி தொடங்கி ஜூன் 3-ஆம் தேதி வரை ஐந்தாம் கட்ட பயிற்சியும் நடைபெறவுள்ளது.
பயிற்சி மேற்கொள்ள வருபவா்கள் தங்களது பதிவை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் -ல் பதிவு செய்து,12 நாட்களுக்கான பயிற்சி கட்டணம் வரி உள்பட ரூ. 1,770-ஐ செலுத்த வேண்டும். ஒருவருக்கான பயிற்சி நேரம் நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் ஆகும். மகளிருக்கு மாலை 4 மணி முதல் 5 மணி வரை தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நீச்சல் பயிற்சி வகுப்பு நீச்சல் பயிற்சியாளா் மற்றும் உயிா்க் காப்பாளா்கள் பாதுகாப்புடன் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். கூடுதல் தகவல் பெற நீச்சல் பயிற்றுநா் கைப்பேசி எண் 9597695559, அலுவலக தொலைபேசி எண் 04365-253059 ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம்.