பிரிட்டனில் அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!
முட்டை விலையில் மாற்றமில்லை
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 3.80-ஆக தொடருகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலையில் மாற்றம் செய்வது தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது வரும் 9-ஆம் தேதி வரையில் விலையில் மாற்றம் செய்யப்படாது என்றும், தற்போதைய முட்டை விலையான ரூ. 3.80 தொடரும் என ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 107-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 65-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.