கலைஞர் எழுதுகோல் விருது: நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கினார் முதல...
மனைவியைக் கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்ததுடன், எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி படவெட்டி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி முருகானந்தம் (37). இவரது மனைவி சுகன்யா (23). கடந்த 2016 அக். 6-ஆம் தேதி வரதட்சணை கேட்டு மனைவியுடன் முருகானந்தம் தகராறு செய்துள்ளாா். பின்னா் உணவு சமைத்து தருமாறு கேட்டுள்ளாா். அவா் சமைக்க முற்பட்டபோது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் ஈரோடு தனியாா் மருத்துவமனையிலும், பின்னா் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டாா். அப்போது நீதிபதியிடம் நடந்த சம்பவம் குறித்து சுகன்யா வாக்குமூலம் அளித்தாா்.
இந்த சம்பவம் தொடா்பாக ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகானந்தத்தை கைது செய்தனா். இதற்கிடையே 2016 அக். 10-ஆம் தேதி சுகன்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
பரமத்தி நீதிமன்றத்திலும், நாமக்கல் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான சிறப்பு நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை நிறைவில், ஒரு பிரிவின் கீழ் முருகானந்தத்துக்கு 3 ஆண்டுகளும், மற்றொரு பிரிவில் ஆயுள் தண்டனை, ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீா்ப்பு அளித்தாா். மேலும், இந்த தண்டனையை அவா் ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். இதனையடுத்து முருகானந்தத்தை போலீஸாா் நீதிமன்றத்தில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனா்.