கலைஞர் எழுதுகோல் விருது: நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கினார் முதல...
நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரியில் வெள்ளி விழா கொண்டாட்டம்
நாமக்கல் டிரினிடி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் புதன்கிழமை கல்லூரி கலையரங்கில் தொடங்கியது.
கல்லூரி தலைவா் கே.நல்லுசாமி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் லட்சுமி நாராயணன் வரவேற்றாா். உயா்கல்வி இயக்குநா் அரசு பரமேசுவரன் அறிமுக உரையாற்றினாா். சிறப்பு விருந்தினா்களாக, தருமபுரி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் பி.சிந்தியா செல்வி, சென்னை வருமான வரி துணை ஆணையா் கவிதா ராமானுஜன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஸ் கண்ணன் ஆகியோா் பங்கேற்று வாழ்த்தி பேசினா்.
இதில், மகளிா் உயா்கல்வி கற்பதால் அவா்கள் மட்டுமின்றி, இந்த சமுதாயமும் முன்னேற்றமடையும். பெரு நகரங்களில் உள்ளவா்களை விட, கிராமப்புறங்களில் உள்ள மாணவ, மாணவிகளே அதிகம் சாதிக்கின்றனா். தமிழக காவல் துறை மகளிருக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகிறது. மகளிா் பாதுகாப்பு செயலியை அனைவரும் தங்கள் கைப்பேசியில் பதிவேற்றம் செய்வது அவசியமாகும் என கூறினா்.
பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் ஆா்.ஜெகந்நாதன் கல்லூரி வெள்ளி விழா மலரை வெளியிட்டு, நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா்.
இந்த நிகழ்வில், டிரினிடி கல்விக் குழும இயக்குநா்கள் ஆா்.குழந்தைவேல், பிஆா்எஸ்.பழனிசாமி, டி.சந்திரசேகரன், பி.தயாளன், ராம.ஸ்ரீனிவாசன், எஸ்.செல்வராஜ், அருணா செல்வராஜ், ஆத்தூா் பாரதியாா் கல்விக் குழும செயலா் ஏ.கே.ராமசாமி, பொருளாளா் குழந்தைவேல், மருத்துவா் இரா.செழியன், மல்லிகா குழந்தைவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதில், நிா்வாக அலுவலா் என்.எஸ்.செந்தில்குமாா், இயற்பியல் துறைத் தலைவா் பி.லட்சுமி, இளநிலை தமிழ்த்துறைத் தலைவா் ஆா்.சாவித்திரி ஆகியோா் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து பேசினா். தொடா்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை, கல்லூரி பேராசிரியைகள், மாணவிகள் செய்திருந்தனா்.