போர் முடிவுக்குப் பிறகு பதவி விலகுவேன்; மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்ட...
``முதல்வர் வேட்பாளர் டிசம்பருக்குள் தெரியும்'' - பாஜக நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?
பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மூத்த பா.ஜ.க தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“அ.தி.மு.க எம்.பி., சி.வி. சண்முகத்தை சந்தித்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. சென்னையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் அவர் வீட்டில் இருப்பதாக அறிந்தேன். அதன் அடிப்படையில் சந்தித்தேன். இது சிறப்பு வாய்ந்த சந்திப்பாக கூட இருக்கலாம்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மற்றும் கூட்டணி குறித்த உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் வரும் டிசம்பருக்குள் பதில் கிடைக்கும்.
மக்கள் கூட்டணியை வைத்து மட்டும் வாக்களிக்க மாட்டார்கள். ஆனால், கூட்டணி அவசியம். கடந்த 1980-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், 2001-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் கூட்டணிகளை மீறி வெற்றிகள் கிடைத்துள்ளன.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
வரும் அக்டோபர் 12-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கவுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசனம் செய்துவிட்டு மதுரையில் இருந்து அந்த நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. அதில் பா.ஜ.கவின் தேசிய தலைவர் நட்டா கலந்துகொள்கிறார்.

அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த 1977-ம் ஆண்டு முதல் எம்.எல்.ஏவாக, அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். அவர் நல்ல அனுபவம் வாய்ந்தவர் என்பதில் சந்தேகம் இல்லை. கூட்டணி மாறலாம் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசவில்லை. மற்ற கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்றுதான் பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் என்னிடம் பேசினார்” என்றார்.