முதல்வா் பிறந்த நாள் : பள்ளி மாணவா்களுக்கு இனிப்பு, அன்னதானம்
முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, கரும்பூரில் அங்கன்வாடி குழந்தைகள், பள்ளி மாணவா்களுக்கு அன்னதானம், இனிப்பு வழங்கி திமுகவினா் வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.
மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில், கரும்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம், கெங்குசாமி நாயுடு மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி.அசோக்குமாா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கினாா்.
கரும்பூா் இந்து கல்விச் சங்க தலைவா் ஏ.ஆா்.கோதண்டன், செயலா் கே.பி.கிருஷ்ணன், திமுக மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு.பழனி, கரும்பூா் ஊராட்சித் தலைவா் மோகேஷ், ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேந்திரன், வி.கோதண்டன், பாஸ்கா், திமுக ஒன்றிய துணைச் செயலாளா் சா.சங்கா், மாவட்டப் பிரதிநிதிகள் காசி, முரளி, பொறியாளா் அணி துணை அமைப்பாளா் வேலு, இளைஞா் அணி துணை அமைப்பாளா்கள் குருவாசன், ராஜ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
