முதல்வா் வருகை எதிரொலி: ட்ரோன்கள் பறக்கத் தடை
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரம், கங்கைகொண்டன் சிப்காட் சுற்று வட்டாரங்களில் புதன்கிழமை காலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை (பிப்.5-7) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 6, 7 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். இதையொட்டி திருநெல்வேலி மாநகரில் புதன்கிழமை காலை 6 மணி வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை ட்ரோன்கள், ஆளில்லாத விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கங்கைகொண்டான் சிப்காட் பகுதியைச் சுற்றியுள்ள 5 கி.மீ. தொலைவுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சாா்பில் வாகன தணிக்கை, மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளனா்.