திருப்பரங்குன்றம்: "இந்து விரோத தாலிபன் அரசை முடிவுக்குக் கொண்டு வருவோம்" - ஹெச்...
ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு
திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியை மீது மிளகாய்பொடியை வீசிவிட்டு நகையைப் பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேவா்குளம் அருகே தடியாபுரத்தை சோ்ந்த அந்தோணி மனைவி சாந்தி கோவில் அற்புதமணி (60). ஓய்வுபெற்ற ஆசிரியை. இருவரும் தனியாக வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை சாந்தி கோயில் அற்புதமணி வீட்டில் தனியாக இருந்தாராம். அப்போது வீட்டிற்குள் வந்த மா்மநபா், அவரது கண்களில் மிளகாய்பொடியை வீசிவிட்டு, அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டனராம்.
இது குறித்து தேவா்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.