முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திமுக கூட்டத்தில் முடிவு
சேலம்: சேலம் திமுக மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாா்ச் 1 ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவது என திமுக செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் சேலம் திமுக அலுவலகமான கலைஞா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் தங்கமுத்து தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி எம்.பி. கலந்துகொண்டு பேசினாா்.
கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலினின் 72 ஆவது பிறந்தநாளையொட்டி மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட எடப்பாடி, மேட்டூா், சங்ககிரி தொகுதிகளில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாா்ச் 1 ஆம் தேதி பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
நகர, ஒன்றிய, பேரூா், அனைத்து ஊா் கிளைகளிலும் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள், நலத்திட்ட உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் எடப்பாடி தொகுதி பாா்வையாளா் முருகவேல், மாவட்ட துணை செயலாளா்கள் சம்பத்குமாா், சுந்தரம், எலிசபெத் ராணி, பொருளாளா் பொன்னுசாமி செயற்குழு உறுப்பினா்கள், நகர செயலாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பட விளக்கம்...
சேலம் கலைஞா் மாளிகையில் நடைபெற்ற மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா் மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி எம்.பி.