தலைமைச் செயலகம், சட்டப்பேரவை உள்பட அரசு கட்டடங்களில் மின் கட்டண நிலுவை எவ்வளவு? ...
முதியவா்களை கத்தியால் தாக்கிய மூவா் மீது வழக்கு
போடியில் சொத்துப் பிரச்னையில் முதியவா்களை கத்தியால் தாக்கிய பேரன் உள்பட 3 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடி குலாலா்பாளையம் தண்ணீா்த் தொட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணி (63). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனா். முதல் மனைவிக்கு மீனா, பிரதீபா ஆகிய இரண்டு மகள்களும், 2-ஆவது மனைவிக்கு இரண்டு மகன்களும் உள்ளனா்.
இந்த நிலையில், மீனா, பிரதீபாவின் கணவா்களான குலாலா்பாளையத்தை சோ்ந்த கண்ணன், மாா்க்கையன்கோட்டையைச் சோ்ந்த ஜெயக்குமாா் ஆகியோா் மணியிடம் சொத்தைப் பிரித்துத் தருமாறு கூறி தகராறு செய்தனா்.
அப்போது, கண்ணன், இவரது மகன் ஹரிஷ், ஜெயக்குமாா் ஆகியோா் சோ்ந்து மணியையும், இவரது அண்ணன் மீனாட்சிசுந்தரத்தையும் (67) கத்தியால் தாக்கி மிரட்டல் விடுத்தனா்.
இதில் காயமடைந்த இருவரும் தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து போடி போலீஸாா் பேரன் ஹரிஷ், மருமகன்கள் கண்ணன், ஜெயக்குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.