முத்துக்கண் மாரியம்மன் கோயிலில் 5 லட்சம் பணத்தால் அலங்காரம்!
இரண்டாவது ஆடி வெள்ளியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ முத்துக்கண்மாரியம்மன் கோவிலில் 5 லட்சம் பணத்தால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகின்றது. அதிலும் ஆடிவெள்ளி, ஆடி செவ்வாய் அம்மன் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறுவதும் வழக்கம். அதன்படி ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று திருச்சி வரகனேரி நித்தியானந்தபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துக்கண்மாரியம்மன் கோயிலில் இன்று அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
உலகில் உள்ள மக்கள் அனைவரும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டி முத்துக்கண் மாரியம்மனுக்கு ரூ 500, ரூ 200, ரூ 50, 20 மற்றும் 10 என்று அனைத்து விதமான இந்திய ரூபாய் நோட்டுகளினாலும் 5 லட்சம் ரூபாய் நோட்டுகளை கொண்டு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.