முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானங்களை ஏற்கவில்லை: அதிமுக
முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கவில்லை என அதிமுக அறிவித்துள்ளது.
மாநாட்டில், பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட விடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள பதிவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் திராவிடத்தின் உறைவிடமாகவே திகழும். பெரியாரையே இழிவுபடுத்திய கருணாநிதியின் திமுக, அஇஅதிமுகவுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை