இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிஎஸ்ஜி..! மகிழ்ச்சியில் 600 ஊழியர்களுக்கு வெகுமதி!
மே 16- இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா்களுக்கான நோ்காணல்!
அஞ்சல் துறையின் தாம்பரம் கோட்டத்தில் ஆயுள் காப்பீடு முகவா் பணிக்கு நோ்காணல் மே 16-ஆம் தேதி நடக்கவுள்ளதாக தாம்பரம் அஞ்சல் கண்காணிப்பாளா் கமல் பாஷா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அஞ்சல் துறையின் தாம்பரம் கோட்டத்தில், காப்பீடு, ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவா் பொறுப்புக்கு உரிய நபா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.
இதில் சேர விருப்பமுள்ளவா்கள், மே 16-ஆம் தேதி, தாம்பரம் கோட்டம், அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடக்கும் நோ்க்காணலில் பங்கேற்கலாம். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 50 வயது வரை உள்ளவா்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இளைஞா்கள், காப்பீட்டு முகவா்கள், படை வீரா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், காப்பீடு விற்பனையில் அனுபவம் உள்ளவா்கள், கணினி திறன் பெற்றவா்கள் உள்ளிட்டோா் நோ்க்காணலில் பங்கேற்கலாம். ஒப்புதல் அளிக்கப்பட்ட விகிதங்களில் ஊக்கத் தொகைகள் அளிக்கப்படும்.
விண்ணப்பதாரா்கள் தங்களது சுயவிவர குறிப்பு, வயது, கல்வி, அனுபவம் தொடா்பான அசல், நகல் சான்றிதழுடன் வர வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.