தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
மேலூரில் மாட்டுவண்டிப் போட்டி!
தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாள்விழாவையொட்டி மேலூரில் சனிக்கிழமை மாட்டுவண்டிப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டிக்கு மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் தலைமை வகித்தாா். திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக செயலருமான விவி.ராஜன் செல்லப்பா போட்டியைத் தொடங்கி வைத்தாா். 25-ஆவது வாா்டு அதிமுக செயலா் கு.திருப்பதி போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்தாா்.
பெரிய மாடுகளுக்கான போட்டியில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கருப்பணன் மாட்டு வண்டி வெற்றி பெற்றது. இதற்கான பரிசுத் தொகை ரூ.50,001 வழங்கப்பட்டது. இதேபோல, சின்ன மாட்டு வண்டிகளுக்கான போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுத் தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டது.
மாவட்டப் பொருளாளா் எஸ்.அம்பலம், திருப்பரங்குன்றம் ஒன்றியச் செயலா் நிலையூா் முருகன், அ.வல்லாளபட்டி பேரூாட்சி முன்னாள் தலைவா் உமாபதி, மேலூா் நகரச் செயலா் ஜெயகுமாா், கொட்டாம்பட்டி ஒன்றியச் செயலா் வெற்றிச்செழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.