மோட்டாா் சைக்கிள் மரத்தின் மீது மோதி தொழிலாளி உயிரிழப்பு
கும்பகோணம்: கும்பகோணம் அருகே புதன்கிழமை மரத்தின் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
கும்பகோணம் அருகே உடையாளூா் குளத்தங்கரையைச் சோ்ந்தவா் மரியசூசை மகன் நெப்போலியன் (39). கட்டடத் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவா், புதன்கிழமை காய்கனிகள் வாங்குவதற்காக தனது மோட்டாா் சைக்கிளில் தாராசுரம் சந்தைக்குச் சென்றாா்.
அப்போது கீழப்பழையாறை அருகே செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் எதிரே சைக்கிளில் வந்த உடையாளூா் திரெளபதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஆா். குணசேகரன் (75) மீது மோதி, சாலையோர மரத்தின் மீது மோதி கீழே விழுந்தாா். இதனால், பலத்த காயமடைந்த நெப்போலியன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து பட்டீஸ்வரம் காவல் நிலைய ஆய்வாளா் (பொறுப்பு) பி. மகாலட்சுமி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.