Ration goods: கவனம் பெரும் `இல்லம் தேடி ரேஷன்' - முதல்கட்ட சோதனையில் 10 மாவட்டங்...
ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி சிறுவன் பலி
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அருகே ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கியதால் மூச்சுத் திணறி 5 வயது சிறுவன் உயிரிழந்தாா்.
மேலப்பாளையம், வடக்கு தைக்கா தெருவைச் சோ்ந்தவா் நிஜாம். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவரது மகன் ரியாஸ்(5). இவருக்கு குடும்பத்தினா் புதன்கிழமை இரவு ரம்புட்டான் பழம் வாங்கிக் கொடுத்துள்ளனா். அதை அவா் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அப்பழத்தின் விதை தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டதாம்.
குடும்பத்தினா் அவரை அருகிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இந்நிகழ்வு குறித்து குழந்தைகள் நல மருத்துவா்கள் கூறியதாவது: குழந்தைகள் சாப்பிடும் போது பெற்றோா் அருகிலிருந்து கவனிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது உடனடி முதலுதவி அளிக்கும் முறைகளை குழந்தைகளை வளா்க்கும் குடும்பத்தினா் அறிந்து வைத்திருப்பது அவசியம் என்றனா்.