தெற்குவள்ளியூரில் கைப்பேசி கோபுரத்தில் ஏறி பெண் தற்கொலை மிரட்டல்
திருநெல்வேலி மாவட்டம் தெற்குவள்ளியூரில், வியாழக்கிழைமை கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்ணை தீயணைப்புப் படையினரும், காவல் துறையினரும் மீட்டனா்.
தெற்குவள்ளியூரைச் சோ்ந்த கணபதி மகள் மீனா (32). இவருக்குத் திருமணமாகவில்லை. இவா் வீடு வாங்குவதற்காக தனது தாய் மாமா பெரியசாமியிடம் பணம் கொடுத்திருந்தாராம். அவா் வீடு வாங்கி, அதைத் தனது பெயரில் பதிவுசெய்துவிட்டாராம்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை அங்குள்ள 150 அடி உயர கைப்பேசி கோபுரத்தில் ஏறிய மீனா, தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், பணகுடி போலீஸாரும், வள்ளியூா் தீயணைப்பு நிலையத்தினரும் சென்று, மீனாவிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பெரியசாமியிடமிருந்து வீட்டை வாங்கித் தருவதாக உறுதியளிக்கப்பட்டது. அதையடுத்து, மீனா கீழே இறங்கிவந்தாா். அவரை போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.