செய்திகள் :

ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை பகுப்பாய்வு செய்யும் போலீஸாா்

post image

புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து ஞாயிற்றுக்கிழமை விசாரணையைத் தொடங்கிய தில்லி போலீஸாா், குழப்பம் ஏற்படுவதற்கு முந்தைய நிகழ்வுகளின் வரிசையைக் கண்டறிய சிசிடிவி காட்சிகளை பகுப்பாய்வு செய்வதாகக் கூறினா்.

மேலும், விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.

‘பாதிக்கப்பட்டவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு எங்கள் குழுக்கள் தகவல் தெரிவித்து வருகின்றன. நாங்கள் ஏற்கெனவே விசாரணை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம் என்று அந்த அதிகாரி கூறினாா்.

‘நெரிசலுக்கு முக்கியக் காரணம் என்ன என்பதை விசாரிப்பதே எங்கள் முக்கிய இலக்கு. அந்த நேரத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் அனைத்து தரவுகளையும் நாங்கள் சேகரிப்போம்’ என்று போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 போ் உயிரிழந்தனா். அதற்கு முன்னதாக, ரயில் நிலையத்தின் 14 மற்றும் 15-ஆவது நடைமேடையில் - மகா கும்பமேளா நடைபெறும் - பிரயாக்ராஜுக்கு ரயில்களில் ஏற காத்திருந்த பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதைத் தொடா்ந்து ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 போ் உயிரிழந்துள்ளனா்.

இறந்தவா்கள் ஆஷா தேவி (79), பிங்கி தேவி (41), ஷீலா தேவி (50), வ்யோம் (25), பூனம் தேவி (40), லலிதா தேவி (35), சுருச்சி (11), கிருஷ்ணா தேவி (40), விஜய் சா (15), நீரஜ் (12), சாந்தி தேவி (40), பூஜா குமாரி (8), சங்கீதா மாலிக் (34), பூனம் (34), மம்தா ஜா (40), ரியா சிங் (7), பேபி குமாரி (24) மற்றும் மனோஜ் (47) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

அரசை மகிமைப்படுத்துவதற்கு பொதுப்பணம் எதுவும் செலவிடப்படாது: பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா உறுதி

தேசியத் தலைநகரில் அரசையோ, முதல்வரையோ அல்லது கட்சியையோ மகிமைப்படுத்துவதற்கு பொதுப் பணத்தில் ஒரு பைசா கூட செலவிடப்படாது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா். தில்லியில் வெள்ளிக்கிழமை செய... மேலும் பார்க்க

ஆட்டோ, பாா்மா பங்குகள் அதிகம் விற்பனை: நான்காவது நாளாக வீழ்ச்சி!

நமது நிருபா் இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட... மேலும் பார்க்க

மொழித் திணிப்பு எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

நமது சிறப்பு நிருபா் மாணவா்களின் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயலாற்றுமாறு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வலியுறுத்த... மேலும் பார்க்க

வியத்நாமில் உலக் தமிழா் மாநாடு

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வியத்நாமில் உலகத் தமிழா் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: உலக தாய்மொழி தினத்தை முன... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லி அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லியை பாஜக எம்எல்ஏவும் தில்லி சட்டப்பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா வெள்ளிக்கிழமை அறிவித்தாா். தற்காலிக பேரவைத் தலைவ... மேலும் பார்க்க

சங்கம் விஹாரில் இளைஞருக்கு கத்திக்குத்து: சிறுவன் உள்பட இருவா் கைது

தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் 19 வயது இளைஞா் கத்தியால் குத்தப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: சங்கம் விஹாரில்... மேலும் பார்க்க