வக்ஃப் மசோதாவை கண்டித்து ஏப்.9-இல் இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்
ரஷ்மிகா பிறந்தநாளில் தி கேர்ள்ஃபிரண்ட் பட பாடல்!
நடிகை ரஷ்மிகா மந்தனா பிறந்தநாளில் தி கேர்ள்ஃபிரண்ட் படத்தின் பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.
அனிமல், புஷ்பா - 2 திரைப்படங்களின் தொடர் வெற்றியால் நடிகை ரஷ்மிகா உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ளார்.
தெலுங்குப் படங்களைத் தாண்டி பாலிவுட் படங்களில் நடிக்க ரூ. 15 கோடி வரை சம்பளம் பெறும் நடிகையாக உருவெடுத்துள்ளார்.
இந்த நிலையில், ரஷ்மிகா கதை நாயகியாக நடித்துவந்த, ‘தி கேர்ள்ஃபிரண்ட் (the girlfriend) படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி, ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படம் பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வருகிறது. இந்நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு பாடலின் டீசர் வெளியாகியுள்ளது.