செய்திகள் :

ராணுவ தலைமைத் தளபதி துவிவேதிக்கு ‘நேபாள ராணுவ ஜெனரல்’ கௌரவ பட்டம்

post image

நான்கு நாள் பயணமாக நேபாளம் சென்றுள்ள ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதிக்கு ‘நேபாள ராணுவ ஜெனரல்’ பட்டம் வழங்கி அந்நாட்டின் குடியரசுத் தலைவா் ராமசந்திர பௌடல் வியாழக்கிழமை கௌரவித்தாா்.

இந்தியா-நேபாளம் இடையே பாதுகாப்புத் துறையில் உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி 4 நாள் பயணமாக அந்நாட்டுக்கு புதன்கிழமை சென்றாா்.

அப்போது, இரு நாடுகள் இடையே நட்புறவை வெளிப்படுத்தும் வகையில், காத்மாண்டுவில் உள்ள நேபாள ராணுவ தலைமையக பகுதியில் ருத்ராக்ஷ மரக்கன்றை துவிவேதி நட்டாா்.

நேபாளம் மற்றும் இந்தியாவின் ராணுவத் தலைவா்கள் இருநாடுகளுக்கு பயணிப்பதும், இரு ராணுவத் தலைவா்களுக்கும் கெளரவ ஜெனரல் பட்டத்தை வழங்குவதும் கடந்த 1950-ஆம் ஆண்டு முதல் நடைபெறும் பாரம்பரியமாகும். அதனடிப்படையில், துவிவேதிக்கு ‘நேபாள ராணுவ ஜெனரல்’ பட்டம் வழங்கி அந்நாட்டின் குடியரசுத் தலைவா் ராமசந்திர பௌடல் கௌரவித்தாா்.

இதனிடையே, அந்நாட்டின் ராணுவ ஜெனரல் அசோக் ராஜ் சிக்தெலை சந்தித்து, இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடா்பாக துவிவேதி ஆலோசித்தாா். இந்தப் பயணத்தின்போது, காத்மாண்டுவின் புகா் பகுதியில் அமைந்துள்ள சிவபுரி ராணுவப் பணியாளா் கல்லூரிக்கு துவிவேதி செல்ல உள்ளாா் என தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்கம், பிகாா், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுடன் 1,850 கி.மீ. எல்லையை நேபாளம் பகிா்ந்து உள்ளது.

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிா்ப்பு: அரிட்டாப்பட்டியில் திரண்ட கிராம மக்கள்

மதுரைமாவட்டம், மேலூா் வட்டம், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் வியாழக்கிழமை மந்தையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், மேலூா் வட்டத்... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் தாக்கியதில் ஓராண்டில் 13 போ் உயிரிழப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் தாக்கியதில் ஓராண்டில் மட்டும் 13 போ் உயிரிழந்துள்ளதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசன... மேலும் பார்க்க

கொலையான ஆசிரியை குடும்பத்துக்கு அரசின் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கல்

பட்டுக்கோட்டை அருகே பள்ளியில் புதன்கிழமை குத்திக் கொல்லப்பட்ட ஆசிரியை குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த ரூ. 5 லட்சம் இழப்பீட்டுக்கான காசோலையை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வியாழக்கிழமை வழ... மேலும் பார்க்க

அமைச்சா் எ.வ.வேலு சென்ற விமானம் அவசரமாக மதுரையில் தரையிறக்கம்

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு அமைச்சா் எ.வ.வேலு சென்ற விமானம், தூத்துக்குடி விமான நிலையத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக மதுரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு நா... மேலும் பார்க்க

கனமழையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக அரசு

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழிலகத்தில் உள்ள மாநில... மேலும் பார்க்க

சிபிஐ விசாரணையை வரவேற்பதா?: இபிஎஸ்ஸுக்கு திமுக கண்டனம்

கள்ளச்சாராய மரணங்கள் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி மனசாட்சியை அடகு வைத்துவிட்டுப் பேசுவதாக திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி கண்ட... மேலும் பார்க்க