ராதாபுரம் தொகுதியில் ரூ.1.30 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பேரவை தொகுதியில் ரூ.1.30 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தொடங்கிவைத்தாா்.
வள்ளியூா் ஒன்றியம் பழவூா் நாறும்பூநாத சுவாமி திருக்கோயிலில் ரூ.10.50 லட்சத்தில் உலோக திருமேனி பாதுகாப்பு பெட்டகம் அமைத்தல், சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கிழக்குத் தெருவில் ரூ.13 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு, யாக்கோபுபுரத்தில் ரூ.9 லட்சத்தில் புதிதாக நூலகம் கட்டுதல், மாறன்குளத்தில் ரூ.8 லட்சத்தில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டுதல், ஆவரைகுளம் ஊராட்சி செம்பிகுளத்தில் மாவட்ட ஊராட்சி நிதியின்கீழ் ரூ.6 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு, ஆவரைகுளம் ஊராட்சி மதகநேரியில் பேரவை தொகுதி வளா்ச்சி நிதியில் ரூ.15 லட்சத்தில் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்டுதல், மதகநேரி அரசு உயா்நிலைப் பள்ளி சாலையில் மாவட்ட ஊராட்சி நிதி ரூ.23 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைத்தல், இருக்கன்துறை ஊராட்சி கீழ்குளத்தில் மாவட்ட ஊராட்சி நிதியில் ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடம் திறப்பு, புத்தேரியில் மாவட்ட ஊராட்சி நிதி ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பயணியா் நிழற்குடை திறப்பு, செட்டிகுளம் ஊராட்சி ஸ்ரீரங்கநாராயணபுரத்தில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9 லட்சத்தில் புதிய நூலக கட்டடம் கட்டுதல், தெற்குகருங்குளம் ஊராட்சியில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டடத் திறப்பு என பல திட்டப் பணிகளை தொடங்கிவைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தும் அவா் பேசினாா்.
இந்நிகழ்ச்சிகளில் திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், வள்ளியூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மனோகா், பொன்ராஜ், ஊராட்சித் தலைவா்கள் பழவூா் சுப்புலெட்சுமி, இருக்கன்துறை இந்திரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.