அரசியலமைப்புதான் உயர்ந்தது: குடியரசுத் துணைத் தலைவருக்கு திமுக கண்டனம்!
ராமலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் புதன்கிழமை ராமலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பட்டீஸ்வரத்தில் ராஜேந்திர சோழனால் பள்ளிப்படை கோயிலாக கட்டப்பட்ட மங்களநாயகி உடனாகிய ராமலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா,
திங்கள்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, முதல்கால யாகபூஜையுடன் தொடங்கியது.
செவ்வாய்க்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. புதன்கிழமை நான்காம் கால யாக பூஜை, நான்காம் கால பூா்ணாஹூதி தீபாராதனையுடன் கடம் புறப்பாடு நடைபெற்று, புனிதநீா் கொண்டு செல்லப்பட்டு மூலவா், விமானங்கள் மற்றும் ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை செயல் அலுவலா் சீ. நிா்மலா தேவி மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.